.jpg)
பயங்கரமா யோசிச்சது!
ஊர்ல இருந்து புதுச் சட்டை ஒண்ணு வாங்கிவந்து இருந்தேன். ஆசையா ஆஃபீஸுக்குப் போட்டுட்டுப் போனா, யாருமே ''சட்டை புதுசா சார்?''னு கேட்கலை. அப்போதான் எனக்கு அந்தக் கதை ஞாபகம் வந்துச்சு. புது மாப்பிள்ளை ஒருத்தன் புதுசா மோதிரம் வாங்கிப் போட்டுக்கிட்டு, ஊர் முழுக்கச் சுத்திச்சுத்திவந்தான். ராத்திரி ஆகிடுச்சு. ஊர்ல ஒருத்தன்கூட ''என்னய்யா, மோதிரம் புதுசா இருக்கு?''னு கேட்கலை. மாப்புக்கு செமக் கடுப்பாகிடுச்சு. என்னடா இது, எவ்வளவு காசுப் போட்டு மோதிரம் வாங்கினோம். ஒருத்தன்கூட கவனிச்சுக் கேட்கலியேன்னு வெறுப்பாகி, வைக்கோல் போருக்குத் தீ வெச்சுட்டான். ஊர்ல இருந்து எல்லாரும் தீயை அணைக்கத் தண்ணி எடுத்துக்கிட்டுவந்தாங்க.
நம்ம மாப்பு நடுவுல நின்னுக்கிட்டு, ''ஏ.. . இங்கிட்டு ஊத்துலே... நீ அங்கிட்டு ஊத்துலே''னு கையை நீட்டி நீட்டிச் சொன்னான். தீ வெளிச்சத்துல மோதிரம் மின்னுச்சு. அப்போ அதைக் கவனிச்ச ஒருத்தன் கேட்டான். ''மாப்பு, மோதிரம் புதுசா?''னு. உடனே உணர்ச்சிவசப்பட்டு, ''ஆமாலே அறுதலி... இந்த எழவைக் காலையிலேயே கேட்டு இருந்தா, வைக்கோல் போராவது தப்பிச்சி இருக்கும்ல''னு சொல்லிட்டான். அப்புறம் என்ன... தர்மஅடிதான். நான் இப்போ என்ன யோசிக்கேன்னா, ஆஃபீஸ்ல எந்தப் பக்கம் தீயை வெச்சா, 'சட்டை புதுசா’னு கேட்பானுங்க?
நாக்கைக் கடிச்சா தப்பா?.gif)
கொஞ்சநாள் பதிவுலகப் பக்கம் நான் வரலை... அதுக்குள்ள என்னென்னமோ நடந்துபோச்சு. ஒருநாள் திடீர்னு ''சட்டசபையில விஜயகாந்த் நாக்கைக் கடிச்சுட்டார்... அதனால் சஸ்பெண்ட்''னு ஆபீஸ்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிட்டேன். 'மனுசன் கோவக்காரர்தான்... அதுக்காக இப்படி எதிரில இருக்கிறவர் நாக்கையா கடிக்கிறது?’னு ஃபீல் பண்ணிக்கிட்டே வீட்ல போய் டி.வி-யைப் போட்டுப் பார்த்தா... அவர் நாக்கைத்தான் அவரு கடிச்சி இருக்காரு.
அடப்பாவிகளா... இதுக்காய்யா பத்து நாளு சஸ்பெண்ட் செஞ்சீங்க. ஒரு மனுசன் தன்னோட சொந்த நாக்கைக் கடிக்கக் கூடாதா? அதுக்குக்கூட இங்க சுதந்திரம் இல்லியா?... என்ன கொடுமை சார் இது... நயன்தாரா உதட்டைக் கடிச்ச ஆளை எல்லாம் சும்மா விட்டுடறாங்க... சொந்த நாக்கைக் கடிச்ச மனுசனை சஸ்பெண்ட் பண்றாங்க... ஒண்ணுமே புரியலையே!
மணி சி.எம்.!
நான் ஒம்பதாம்ப்பு படிச்சப்போ மணின்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். பாசக்காரப் பய... ஓசியில ஐஸ் வாங்கித் தருவான். அவன்கிட்ட ஒரு கெட்ட பழக்கம். திடீர் திடீர்னு சண்டை போடுவான். ''இனிமே உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்''னு சபதம் போடுவான்... நாங்க சண்டை போட்டுக்கிட்டு பேசிக்காம இருக்கிறது தெரியாம யாராவது அவன்கிட்ட ''என்னடா நீ மட்டும் வர்றே... செங்கோவி எங்கே?''னு கேட்டுட்டா அவ்ளோதான். டென்ஷன் ஆகிடுவான். ''கண்டகண்டப் பசங்களைப்பத்தி எல்லாம் என்கிட்ட ஏன்யா கேட்கிறீங்க?''னு குதறிடுவான். ஆனா, எல்லாம் ரெண்டு, மூணு நாளைக்குத்தான். அப்புறம் என் தோள் மேல கை போட்டுக்கிட்டு கெக்கேபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு முத நாளு அவன்கிட்ட கேள்வி கேட்ட அதே ஆளை கிராஸ் பண்ணிப் போவோம். என்னமோ தெரியலை. ஜெயலலிதா, சசிகலாவை விரட்டி விட்டுட்டாங்கன்னு செய்தி படிச்சப்போ மணியோட ஞாபகம் வந்துச்சு. இப்போ சசியை, ஜெ. சேர்த்துக்கிட்டாங்கன்னு தெரிஞ்சப்பவும் மணி ஞாபகம். ம்... மணி இப்போ எங்கே இருக்கான்னு தெரியலை. சி.எம்-மா வந்து இருக்கவேண்டிய பய!
ஹன்சிகா சித்தி!
பதிவுல போடறதுக்கு ஹன்சிகா மோத்வானியோட ஸ்டில் வேணும்னு ஒருநாள் தேடிக்கிட்டு இருந்தேன். என் மகனும் என் பக்கத்துல உட்கார்ந்து இருந்தான். அப்போ என் மனைவி சூடா காபி கொண்டுவந்து வெச்சிட்டுப் போனாங்க. அந்தச் சமயத்துல ஹன்சிகாவோட படம் கம்ப்யூட்டர்ல ஓப்பன் ஆச்சு. நான் உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு, என் மகன் என்ன நினைச்சானோ சூடான காபியை எடுத்து ஹன்சிகா மேல அதாவது மானிட்டர் மேல ஊத்திட்டான்.
.gif)
நான் ஒரு செகண்ட் ஹன்சிகா மேலதான் ஊத்திட்டானோனு பதறி 'அய்யோ’னு கத்திட்டேன். அப்புறம்தான் அது லேப்டாப்புனு உறைச்சது. உடனே 'அய்யய்யோ’னு கத்துனேன். அவ்ளோதான். லேப்டாப் அப்படியே ஆஃப் ஆகிடுச்சு. ஏற்கனவே ஆஃபீஸ்ல வொர்க் அதிகம்கிறதால, லேப்டாப்பை சர்வீஸுக்கு எடுத்துட்டுப் போய் சரிபார்க்க, ரொம்ப நாள் ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் பிரச்னைனா... முதல்ல பையன் மேல கோவம் கோவமா வந்திச்சு. அப்புறம், உக்காந்து யோசிச்சுப் பார்த்தப்போ பெருமையா இருந்துச்சு. ஏன்னா, இந்தச் சின்ன வயசுலேயே சித்திக்குக் காபி கொடுக்கணும்னு தெரிஞ்சுருக்கு பாருங்க. என்ன ஒண்ணு, கையில கொடுக்கணும். மூஞ்சியில ஊத்தக் கூடாதுன்னு குழந்தைக்குத் தெரியலை. பரவாயில்லை... போகப் போகக் கத்துக்குவான்!
கனிப் பெயர்ச்சி!
தி.மு.க-வுக்கும் கலைஞருக்கும் பெருமை சேர்த்த கனிமொழி, ஒருவழியா ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகிட்டாங்க... மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே கனிமொழி ஜெயிலுக்குப் போவாங்கன்னு யாருமே நினைச்சுக்கூடப் பார்க்கலை. இன்னும் ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆளுங்கட்சியா இருக்கும்போது உள்ளே போய், எதிர்க் கட்சியாகி வெளியேவந்தது கனிமொழியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். இதுக்குக் காரணம் சனிப்பெயர்ச்சியா, இல்லே இதுக்குப் பேரே சனிப்பெயர்ச்சியான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்!
வயசுக் குழப்பம்!
என் மகன் பொறந்தது 2010-ம் வருஷம் மே மாசம். எங்க ஆஃபீசர் (இவரு குவைத் ஆஃபீசருங்கோ ) கிட்டப் பேசும்போது, 'இந்த மே மாசம் வந்தா, பையனுக்கு ரெண்டு வயசு முடியுது''ன்னேன். அதுக்கு அவர் 'அது எப்படி ரெண்டு வயசு முடியும்? ரெண்டு வயசு ஆரம்பிக்குதுன்னு சொல்லுங்க'ன்னார்.
எனக்கு ஷாக் ஆகிடுச்சு. 'இல்லை சார்... ரெண்டு வருசம் முடிஞ்சிடுச்சு. அதனால, ரெண்டு வயசும் முடிஞ்சிடுச்சு இல்லியா?'னு கேட்டேன். அவரும் சளைக்காமல் 'அது எப்படீங்க முடியும். இனிமே ரெண்டே கால் வரும். அப்புறம் ரெண்டரை. ரெண்டே முக்கால்னு போயி அப்புறம் தானே ரெண்டு முடிஞ்சு மூணு வரும்... அதுக்குள்ளே எப்படி ரெண்டு வயசு முடிஞ்சிடுச்சுன்னு சொல்றீங்க?'னு கேட்டார். நான் டரியல் ஆகிட்டேன். என்னய்யா கணக்கு இது. (இப்போ ஒரு வெளம்பரம்: ப்ளஸ் டூ கணக்குத் தேர்வில் நூத்துக்கு நூறு வாங்குனவன் நானு) எங்கே இருந்துய்யா இப்படி எல்லாம் கிளம்பி வர்றாங்கன்னு யோசிச்சுக்கிட்டே நானும் அரை மணி நேரம் வாதாடிப் பார்த்தேன்.
அதுக்கு அவரு 'என்னங்க இது... இப்படித்தான் போன மாசம் மிஸ்டர். எக்ஸ்கிட்டச் சொன்னேன். அவரும் ஒத்துக்கலை. நீங்க எல்லாம் எங்கே இருந்துய்யா கிளம்பி வர்றீங்க?'னு என்னையே திருப்பிக் கேட்டார். இப்போ நானே கன்ஃபியூஸ் ஆகிட்டேன். என் மகனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு மூணு நடக்குதா? இல்லே, இன்னும் ரெண்டுதான் தொடர்ந்து நடக்குதா? யாராவது கணித மேதை இருந்தா விளக்கம் சொல்லுங்கய்யா!
மட்டனா... மான, ரோசமா?
நம்ம நாடு எப்போ ஃபாரின் மாதிரி ஆகும்னு முன்னாடி யோசிச்சு இருக்கேன். ஆனா, விலைவாசி விஷயத்துல இப்பவே ஃபாரின் மாதிரி ஆகிடுச்சு. 100 ரூபாய் இல்லாம பெட்டிக்கடைக்குக்கூட போக முடியலை. 500 ரூபாய் இல்லாம கோவில்பட்டிக்குப் போக முடியலை. சொந்த ஊருக்கு வந்ததுல இருந்து கறி எடுத்துச் சாப்பிடலியே... இன்னிக்கு எடுப்போம்னு போனேன். ஒரு கிலோ மட்டன் 400 ரூபாய்ங்கிறாங்க. இப்படி இருந்தா ஒரு மனுசன் எப்படிக் கறி சாப்பிடறது... இவங்களே நம்மளை ஜீவ காருண்ய சங்கத்துல சேர்த்து விட்ருவாங்க போலிருக்கே? இப்போ என்ன பண்றது? பேசாம மாமனார் ஊருக்கே திரும்பப் போயிடலாமா? ஒரு மனுசனுக்கு எது முக்கியம்?
.gif)









so he has finished 2.. there is no confusion or complexity here..
who gave you 100 for you in maths? fools..